கோபமாக பேசிய நிதிஷ், பாக்கியா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
நிதீஷ் கோபமாக பேச, பாக்யா பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா காய்கறிகளை நறுக்கி கொண்டிருக்க கோபி ஹாலில் நிற்கிறார். கிச்சனில் பாக்கியவை பார்த்துவிட்டு அமைதியாக நிற்க பாக்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.கொஞ்ச நேரத்தில் யோசித்து கோபி கிச்சனுக்கு வருகிறார் செழியன் வேலைக்கு போயிட்டா ஜெனி ரூம்ல இருக்கா அத்த படுத்துகிட்டு இருக்காங்க என்று சொல்ல நான் உன்னத பாக்க வந்த பாக்க உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்ல முதலில் ரெஸ்டாரன்ட் பற்றி நீ சொல்லும்போது நாங்க நம்பி இருக்கணும் என்று சொல்லுகிறார். பரவால்ல இப்பதான் நான் போ புதுசா ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சிட்டா இல்ல அதுல மீண்டு வந்துவிடுவேன் என்று சொல்லுகிறார்.
கூடவே கொஞ்ச நேரத்தில் தயங்கி இனியா பத்தி பேசணும் இனியாவோட வாழ்க்கையில கல்யாணம் பண்ணி வச்சு தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு என்று சொல்ல இனியாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு பதறுகிறார். முதல்ல இனியாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க என்று சொல்ல ஆகாஷ் இனியாவது சந்தேகப்படும் விஷயத்தை ஆகாஷ் குடும்பத்தினர் இனியாவிடம் நடந்து கொள்ளும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். கண் கலங்கி அழ என் பொண்ணு எவ்வளவு சந்தோஷமா இருந்தா அவை பார்த்து கிட்டு இருக்காளா எனக்கு அப்பவே கனவு வந்தது நான் இப்பவே இனியா கிட்ட பேசுற என்று சொல்ல வேண்டாம் நான் போய் நைட்டு நேர்ல பேசிட்டு வரேன் என்று சொல்ல நானும் வருகிறேன் என்று பாக்கியம் சொல்ல கோபியும் சரி என சொல்லுகிறார் பிறகு கோபி சென்றவுடன் இனியாவை நினைத்து கண்கலங்கி அழுகிறாள்.
மறுபக்கம் நித்திஷ் அம்மா அப்பாவுடன் உட்கார்ந்திருக்க இனியா வந்து நிற்க இவர்கள் எதுவும் பேசாத தான் மீண்டும் மேலே போக உடனே சந்திரிகா இனியாவிடம் உங்க சொந்தக்காரங்க போயிட்டாங்களா ஏன் இங்க வந்து பார்க்க மாட்டாங்களா நீ கல்யாணம் பண்ணி வந்ததிலிருந்து பாதிநாள் இல்ல முழு நேரமாக தான் இருக்கு ரைட்டு தூங்குறதுக்கு தான் இங்க வர என்று சொல்லுகின்றனர் சரி நான் இனிமேல் போகல என்று சொல்ல எதுக்கு நீ எதுக்கு எடுத்தாலும் பதில் பேசுற என்று நிதி சொல்ல நான் எதுவுமே சொல்லல கேட்டதுக்கு பதில் தான சொல்றேன் என்று சொல்லுகிறார். மாறி மாறி இனியாவை வம்பு இழுத்துக் கொண்டே இருக்க இனியாவும் பதில் சொல்லுகிறார் ஒரு கட்டத்திற்கு மேல் நித்திஷ் இனியாவை மேலே அழைத்துச் சென்று எங்க அப்பா அம்மாக்கு மரியாதை கொடுத்து பேச மாட்டியா பெரியவங்களுக்கு இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா என்று சொல்ல முதல்ல அவங்க எப்படி பேசணும்னு அவங்க கிட்ட சொல்லுங்க என்கிட்ட சொல்லாதீங்க அதுக்கப்புறம் நான் மரியாதையா பேசலனா என்கிட்ட வந்து சொல்லுங்க என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் நித்திசும் சுதாகரும் இனியாவின் அம்மா அப்பாவிற்காக காத்துக் கொண்டிருக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்கிறார். வந்துருவாங்க என்று சொல்ல இருவரும் வந்து நிற்கின்றனர் அவர்களை வரவேற்று உட்கார வைத்து என்ன விஷயம் என்று சுதாகர் கேட்க இனியாவை பற்றி தான் பேச வந்தோம் என்று சொல்லுகிறார். வீடு என்றால் சின்ன சின்ன பிரச்சனை இருக்கத்தான் செய்யும் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருப்பாளா என்று கேட்க அப்படி இல்ல சம்மந்தி அவளை கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தறதா சொன்னா என்று சொல்ல உடனே நித்திஷ் கோபப்பட்டு என்னப்பா நம்ம மேல தப்பு இருக்கிற மாதிரி பேசுறாங்க என்று சொல்லுகிறார்.
பொண்ணு லவ் பண்ண விஷயத்தை மறைத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க என்னமோ நம்ம தப்பு பண்ண மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க டெய்லி கடைக்கு வந்து ஆகாஷை பார்ப்பதற்காக தான் அவ போற என்று சொல்ல பாக்கியா என் பொண்ணு என்ன பார்க்கிறதுக்காக தான் வரா என்று சொல்லுகிறார். அதற்கு நித்தீஷ் என்ன சொல்லுகிறார்? பாக்யா கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
