முத்துவை சந்தித்து பேசிய சந்திரா, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்துவை சந்தித்து சந்திரா பேச, விஜயா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஷம் குடித்த பெண்ணை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய அந்தப் பெண்ணின் அண்ணன் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் அவரின் அம்மா உங்களுக்கு இப்ப சந்தோஷமா அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருந்தால் சந்தோஷமா இருந்திருப்பா இப்போ உங்களுக்கு திருப்தியா என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பார் முத்து மீனா இதை கவனித்து நிற்கின்றனர் இதனால் முத்துவின் முகம் மாற நான் வந்து கிளம்புறேன் என்று சொல்ல உடனே அந்த பெண்ணின் அம்மா ரொம்ப நன்றி தம்பி என்று சொல்லுகிறார்.
நீங்க மட்டும் இல்லன்னா இன்னிக்கு என் பொண்ணு உயிரோடு இருந்திருக்க மாட்டா என்று சொன்ன பிறகு முத்துவுடன் நீங்களே சொல்லுங்க தம்பி அவ ஆசைப்பட்ட பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க அவங்களோட சந்தோஷம் தான் முக்கியம் நீங்க சொல்லுங்க என்று சொன்ன முத்து எதுவும் பேசாமல் இருக்க சொல்லுங்க ஆசைப்பட்ட பயண கல்யாணம் பண்ணி வச்சா தான் சந்தோசமா இருக்கணும் சொல்லுங்க என்று மீனாவும் சொல்ல முத்து அவங்க குடும்ப விஷயத்துல நம்ம தலையிட முடியாது என்று சொல்லிவிட்டு, சீதாவை பார்த்து ரொம்ப பார்த்துக்கோ என்று சொல்ல உடனே சீதா பயப்படாதீங்க மாமா நான் இது மாதிரி எதுவும் பண்ண மாட்ட நீங்க ஒரு உயிரை காப்பாத்தி இருக்கிறது ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல முத்துவும் அங்கிருந்து சென்று விடுகிறார்.
மறுபக்கம் விஜயா நீத்து ரெஸ்டாரண்டுக்கு பார்வதி உடன் வருகிறார். நீத்து வந்து பார்க்க என்ன விஷயம் என்று கேட்கிறார் பக்கத்துல ஒரு வேலையா இருந்தா அதனால ரவியை பார்த்துட்டு போனாலும் வந்தேன் என்று சொல்ல நீத்து ரவியை கூப்பிட சொல்கிறார் ரவி ஆள் இல்லாததால் ஒரு விஐபி ஓட பங்க்ஷனுக்கு புட் அரேஞ்ச் பண்றதுக்காக போய் இருக்காரு என்று சொல்ல பிறகு நீத்துவிடம் கல்யாண விஷயத்தைப் பற்றிய ஆரம்பிக்கிறார் கல்யாணம் பண்ணிக்கோமா என்று சொல்ல, எனக்கு இப்பத்திக்கு இன்ட்ரஸ்ட் எல்லா ஆன்ட்டி என்று சொல்லுகிறார். உடனே எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான் ரொம்ப புத்திசாலி நிறைய படிச்சிருக்கான் அவனுக்கும் பிசினஸ் ஐடியா எல்லாம் நிறைய இருக்கு என்று மனோஜ் பற்றி பெருமையாக பேச உனக்கு எப்படிப்பட்ட பையன் வேண்டும் என்று விஜயா கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல நீத்து கோபப்படாமல், பொறுமையா, அமைதியா உங்க பையன் மாதிரி இருக்கணும் என்று சொல்ல,விஜயா மனோஜென நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட அப்படியா என்று சொல்லுகிறார். ஆமா உங்க பையன் ரவி மாதிரி இருக்கணும் என்று சொல்லிவிட்டு பேச கொஞ்ச நேரத்தில் போன் வந்தவுடன் எழுந்து சென்று விடுகிறார்.
உடனே பார்வதி விஜயாவிடம் நீ ரவி கிட்ட சொல்லி உஷாரா இருக்க சொல்லு என்று சொல்லுகிறார். மறுபக்கம் சந்திரா மற்றும் சத்யா இருவரும் முத்துவின் கார் செட்டுக்கு வந்து காத்துக் கொண்டிருக்கிறார் செல்வம் டி வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் முத்துவும் வந்துவிட சீதாவை பற்றி பேசுகின்றனர். அவர் முடிவுல உறுதியா இருக்க மாப்ள அருணை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற அப்படியே இருந்துருவாள்ன்னு பயமா இருக்கு என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதத்த எல்லாரும் இப்படித்தான் சொல்லுவாங்க அப்புறம் நல்லபடியா வாழ்க்கை மாறிடும் அருண் நல்லவனாக இருந்தால் நானே கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன் அவன் கேரக்டர் சரியில்ல நான் அவன் கூட சண்டை போட்டதுனாலையோ அவன எனக்கு புடிக்கலன்றது நாளையும் நான் வேண்டா சொல்லல நாளைக்கு சீதா சந்தோஷமா இருக்கணும் இல்ல அதுக்காக தான் சொல்றேன் என்று சொல்ல இருவரும் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.
விஜயா ஸ்ருதியை கூப்பிட்டு இனிமே அந்த வீட்டு ஓட ரெஸ்டாரண்டுக்கு ரவி வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல அதை நீங்களே ரவி கிட்ட சொல்லுங்க என்று சொல்லுகிறார் விஜயா ரவியிடம் சொல்ல அதற்கு ரவி பதில் என்ன? ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
