பராசக்தி, மதராஸி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி பற்றிப் பார்ப்போம்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், படம் வசூல் சாதனை புரிந்தது. இதன் 2-ம் பாகத்தை இயக்கவும் வெங்கட் பிரபு எண்ணியிருந்தார். ஆனால், விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளாதால் 2-ம் பாகம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படம், ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மதராஸி’ படம் இந்தாண்டு வெளியாகிறது.

இந்த இரண்டு திரைப்படங்கள் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. அதுபோல, வெங்கட்-எஸ்.கே கூட்டணியும் செம கலக்கலாக அமையும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

sk in a different storyline under the direction of venkat prabhu