அடுத்த மாதம் ரிலீஸாகும் ‘குயிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

Web Ads

‘குயிலி’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்..

அறிமுக இயக்குனர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’.

இப்படத்தில் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைக்க, அருண்குமார் தயாரித்துள்ளார்.

‘குயிலி’ படம் பற்றி இயக்குனர் ப.முருகசாமி தெரிவிக்கையில், ‘இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன்.

Web Ad 2

மதுவுக்கு எதிரான ஒரு தாயின் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. தந்தையையும் தனது கணவனையும் குடிகாரனாகக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகிறது? அந்தப் பெண் தனது மகனை என்னவாக உருவாக்குகிறார். மதுவால் தன்னை போல பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் ஒரு முடிவு எடுக்கிறார், அது என்ன? என்பதுதான் கதை.

கோவை அருகே நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில், இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். லிசி ஆண்டனி சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார். யதார்த்தமான படமாகவும் பார்வையாளர்கள் கதையோடு தொடர்பு கொள்வது போலவும் இருக்கும். அடுத்த மாதம் படம் வெளியாகிறது’ என்றார்.

கடந்த ஆண்டு சோமசுந்தரம் நடிப்பில் ‘பாட்டில் ராதா’ படம் மதுவின் தீமை குறித்து பேசி வெளியானது என்பது நினைவுகூரத்தக்கது. அவ்வகையில் ‘குயிலி’ வேறொரு கோணத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.