கவுன்சிலர் சொன்ன வார்த்தை,பாக்கியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கவுன்சிலர் சொன்ன வார்த்தையால் பாக்யா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கவுன்சிலரே சந்தித்து செழியன் கேஸை வாபஸ் வாங்குமாறு கேட்க முடியாது என்று உறுதியாக சொல்லி விடுகிறார் உன் பையன் ஜெயில் போவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை சொல்லி பாக்யாவை அனுப்பி விடுகிறார் உடனே கட்சிக்காரர் ஒருவரும் அவரிடம் சண்டை போட்டுவிட்டு போக இந்த ஆள் எல்லார்கிட்டயும் வம்பு இழுத்துகிட்டு இருக்கான் என்று செல்வி சொல்லுகிறார் உடனே இருவரும் ஜெனி வீட்டுக்கு சென்று பேசுகின்றனர்
பாக்யா ஜெனி இடம் பேச நீங்க பேசாதீங்க ஆன்ட்டி நீங்க இப்பல்லாம் வரவர யார் பேச்சு கேட்க மாட்டேங்கிறீங்க உங்களுக்கு என்ன தோணுதோ செல்பிஷா முடிவெடுக்குறீங்க முன்னாடி எல்லாம் அப்படி இல்ல நீங்க இப்போ மாறிட்டீங்க என்று பேசுகிறார் உடனே பாக்யா நான் கண்டிப்பா செழியனை வெளிய கூட்டிட்டு வந்துருவேன் சொல்ல நான் ரெண்டு நாளா அதுக்கு தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று ஜெனியின் அப்பா சொல்லுகிறார் அந்த ஆளு அரசியல் செல்வாக்கோட இருக்கறதுனால எல்லார்கிட்டயும் பேசிகிட்டு தான் இருக்கேன் ஏற்கனவே உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை இருந்ததா வேற சொல்றாங்க அப்படி இருக்கும்போது நீங்க என்ன பண்ணி இருக்கணும் அலாட்டா இருந்திருக்கணும் அதை விட்டுட்டு இப்படி பிரச்சனையை இழுத்துட்டு வந்து இருக்கீங்க என் பொண்ணு என்னைக்கு நிம்மதியா இருந்தா என்று கூட எனக்கு தெரியல அவ்வளவு பிரச்சனை என்று சொல்ல, பாக்யா ஜெனி இடம் என் பையனே என்னை புரிஞ்சுக்காத அப்போ நீ என்கூட இருந்திருக்க ஆனா இன்னைக்கு என்னால உனக்கு ஒரு பிரச்சனை வந்திருக்கு என்ன மன்னிச்சிடு ஜெனி இன்னிக்கு நைட்குள்ள செழியன் வீட்டுக்கு வந்துருவான் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் பாக்யா செல்வி இருவரும் பேசிக் கொண்டிருக்க போஸ்டரில் கவுன்சிலரின் போட்டோ இருப்பதை பார்த்து செல்வி கோபப்படுகிறார். உடனே கவுன்சிலர் வீட்டில் ஒருவர் பிரச்சினை செய்த நபர் மீண்டும் இந்த போஸ்டரை பார்த்து கோபமாக பேசிவிட்டு காரில் சென்று விட உடனே பாக்கியாக்கு ஒரு யோசனை தோன்றுகிறது செல்வியிடம் இவர் அந்த கவுன்சிலர் மேல கோவமா இருக்காரு இவர் பார்த்து பேசினா ஏதாவது உதவி கிடைக்கும் அந்த கார் ஃபாலோ பண்ணு என்று சொல்லி இருவரும் செல்கின்றனர்.
பிறகு அவர் மினிஸ்டர் வீட்டுக்குள் சென்று விட இவர்கள் வெளியில் நின்று கொண்டிருக்கின்றனர். கொஞ்ச நேரம் கழித்து கேட் திறந்ததால் பாக்யா செல்வி இருவரும் உள்ளே போக ஆனால் அங்கிருக்கும் நபர் அவர்களை இப்போ எல்லாம் மினிஸ்டர் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுகிறார் கொஞ்ச நேரத்தில் கவுன்சிலர் வருகிறார்
அவர் என்ன சொல்லுகிறார்? பாக்யாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
