யாத்ரா, தியாவை தொடர்ந்து அதீப்பும் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இருந்து சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார் சிம்ரன். அப்படம் வெளியாகி குடும்ப ஆடியன்ஸை கவர்ந்தது. படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்ரன். படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். யாத்ரா கிராஜுவேஷனில் எடுத்த புகைப்படங்களை தனுஷ் வெளியிட வைரலானது.
மேலும் மும்பை பள்ளியில் படித்து வந்த சூர்யாவின் மகள் தியாவும் படிப்பை முடித்துவிட்டார். பள்ளியில் நடந்த விழாவில் சூர்யா, ஜோதிகா, சிவகுமார், அவரின் மனைவி லட்சுமி, நக்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இச்சூழலில் சிம்ரனின் மூத்த மகனான அதீப் பக்கா பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். பள்ளியில் நடந்த கிராஜுவேஷன் நிகழ்ச்சியை இன்ஸ்டாவில் வெளியிட்டு ‘தன் மகன் பெரிய ஆளாகிவிட்டான்’ என சந்தோஷப்பட்டிருக்கிறார் சிம்ரன்.
இந்த போஸ்ட்டுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நடிக்க வந்தால் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என நம்பிக்கையுடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.