தான் படித்த பள்ளிக்கு 3 அடுக்கு கட்டிடம் கட்டி தந்த நடிகர் தனுஷ்
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் புதிய மூன்று மாடி கான்கிரீட் கல்விக் கட்டடத்தை கட்டிக் கொடுத்துள்ளார். முன்பு சாதாரண மேற்கூரையுடன் இருந்த பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் இந்த புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்திற்கு “தனுஷ் பிளாக்” என்று பெயரிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை இதே பள்ளியில் கல்வி பயின்ற தனுஷ், தனது பள்ளிக்கு நன்றிக்கடனாக […]