உண்மை சம்பவத்தை படமாக்க ஏன் என் மீது விமர்சனங்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.
mari selvaraj latest speech viral
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், வாழை, மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் மாரி செல்வராஜ் அதனைத் தொடர்ந்து தற்போது பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
துருவிக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றியம் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார் அதாவது தனி மனிதர்களை புகழ் பாடும் கதைகளை மட்டுமே இன்னும் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அந்த இயக்குனர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் தென்மாவட்டங்களை நடக்கும் உண்மை சம்பவங்களை படமாக எடுக்கும் என் மீது ஏன் இவ்வளவு விமர்சனங்கள் ஒரு உண்மை கதை போதும் என சொல்வதற்கு இவர்கள் யார் அந்த உரிமையை கொடுத்தது உண்மையை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம் என தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
mari selvaraj latest speech viral