நடிகர் அனந்த் ராம் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை பிரிகிடாவுடன் இணைந்து சமூக வலைதளங்களில் தங்களது காதல் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவை நோக்கி பயணித்த இருவரும், தங்களது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். திரையுலகம் ஏற்படுத்திய அறிமுகம், நட்பாக தொடங்கி, பின்னர் காதலாக மலர்ந்துள்ளது.
ரசிகர்களால் “மீசைய முறுக்கு தம்பி” மற்றும் “பவி டீச்சர்” என்ற அன்பான அடையாளங்களால் அறியப்படும் இந்த ஜோடி, தற்போது தமிழ் திரையுலகின் புதிய ரியல் லைஃப் ஜோடிகளில் ஒன்றாக இணைந்துள்ளது.
இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், திருமண தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள அனந்த் ராம் மற்றும் பிரிகிடா, அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல புதிய படைப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பும், வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று இருவரும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.