மே 15 முதல் வெளியாகவுள்ள “எக்ஸாம்” சீரிஸுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை!

ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா “எக்ஸாம்” சீரிஸ், வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த தொடருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் நானி, இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளத்தையும், பின்னணி குழுவின் முயற்சியையும் பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற எஸ்.ஜே.சூர்யாவும், “எக்ஸாம்” மாபெரும் வெற்றி பெற வேண்டும் என முழு குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார்.

“சுழல் : தி வோர்டெக்ஸ்” சீசன் 2 மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன், “Wallwatcher Films நிறுவனத்தின் மற்றொரு தரமான படைப்பு இது. இந்த சீரிஸை binge-watch செய்ய காத்திருக்கிறேன்” என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

“இன்ஸ்பெக்டர் ரிஷி” புகழ் சுனைனா, “இந்த தொடரை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என கூறியுள்ளார். அதேபோல் கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ மற்றும் முழு குழுவிற்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். மேலும் அனகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் “எக்ஸாம்” சீரிஸுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

புஷ்கர் – காயத்ரி உருவாக்கத்தில், Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் அப்பாஸ் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

தமிழில் உருவாகியுள்ள “எக்ஸாம்” சீரிஸ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

AbbasAditi BalanAishwarya RajeshDushara VijayanExamNaniSamyuktha VishwanathanSJ SuryahSunainaa