குடும்​பஸ்​தன் சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு “காவிய காதல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் பாரத் மற்றும் சான்வே மேக்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

“மாவீரன்”, “3BHK” போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பாக இந்த திரைப்படத்தை அறிவித்திருந்தது. ஆரம்பத்தில் “புரொடக்‌ஷன் நம்பர் 4” என குறிப்பிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது “காவிய காதல்” என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்கியுள்ளார். ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகும் இந்த படம், இன்றைய தலைமுறை ரசிகர்களையும் குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையில் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டைட்டில் அறிவிப்பு வீடியோவில் பாரத், சான்வே மேக்னா மற்றும் பால சரவணன் ஆகியோரின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நகைச்சுவை கலந்த காட்சிகளும், வண்ணமயமான காட்சிப்பதிவும், ஒரு உற்சாகமான காதல் கதையை முன்வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

நடிகர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், “குடும்பஸ்தன்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற சான்வே மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், கலை இயக்குநராக சி.எஸ். பாலச்சந்தர், ஆடை வடிவமைப்பாளராக கிருத்திகா சேகர் மற்றும் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றுகின்றனர்.

“காவிய காதல்” திரைப்படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bala SaravananBhaarathHariharasuthan AzhagiriKaaviya KadhalSaanve Meghghanaகாவிய காதல்சான்வே மேக்னாபாரத்