தனுஷின் மருமகன் பவிஷ், குஷ்பு மகள் அவந்திகா நடிக்கும் “அட்டாக்கர்”

பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘அட்டாக்கர்’ படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Zinema Media and Entertainment Limited நிறுவனம் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கும் இந்த படம், நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கும் இப்படம், முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் களமிறங்குகிறார்.

வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’, தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதான கதைக்களமாகக் கொண்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. விளையாட்டுடன் இணைந்துள்ள உணர்வுகள், சமூக பின்னணி மற்றும் கலாச்சார அடையாளங்களை ஆழமாக ஆராயும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கும் வகையில் இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கதாநாயகர்களான பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்முறை வாலிபால் பயிற்சி பெற்றுள்ளனர்.

நடிகை குஷ்பு மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா சுந்தர், இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதேபோல், தனுஷின் மருமகனான பவிஷ் கதாநாயகனாக நடிப்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ள ‘அட்டாக்கர்’, விளையாட்டு மற்றும் உணர்வுகளை இணைக்கும் புதுமையான படைப்பாக ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

‘லவ் ஓ லவ்’, ‘ரீமேட்ச்’, ‘அட்டாக்கர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் புதிய இயக்குநர்கள், வலுவான கதைகள் மற்றும் வளர்ந்து வரும் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் தனது முயற்சியை Zinema Media and Entertainment Limited தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

AttackeravantikaDhanushDhanush's Nephew Pavish and Khushbu's Daughter Avantika Team Up for 'Attacker'KhushbuPavish