நடிகர் தனுஷை கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு, யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இவர்கள், கடந்த 2022-ஆம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், மகன்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்களாக தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
- Advertisement -
இந்நிலையில், ஆன்மீகப் பயணமாக தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அங்கு சுவாமி தரிசனம் செய்து வழிபட்ட அவர், மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தொடர்ந்து ‘வை ராஜா வை’ மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.