ஜீவா நடிக்கும் தகப்பன் பட முதல் சிங்கிள் தங்கபுள்ள வெளியீடு!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பாடலாசிரியர் பா. விஜய் வரிகள் எழுதியுள்ளார். முருகவேல் இப்பாடலைப் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழம், பிரிவின் வலி மற்றும் தந்தையின் அளவற்ற அன்பை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெறும். ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வை மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது.

- Advertisement -

மகனிடம் நேரடியாக அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கும் தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது. மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள் மற்றும் முருகவேலின் குரல் என அனைத்தும் இணைந்து பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளன.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, குடும்பப் பாசம், அப்பா – மகன் உறவு மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும், படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. வரும் டிசம்பர் 24-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

JiivaRajisha VijayanThagappanThangapullaThangapulla the First Single from Jiiva’s Thagappan Released