இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!

‘பலாகம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எல்லம்மா’. தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் பாடல் குறித்த சுவாரசியமான தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் பங்களிப்புடன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதனால் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘எல்லம்மா’ திரைப்படம் வரும் மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Devi Sri PrasadMusic Composer Devi Sri Prasad’s Unique New Initiative