‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பு பெற்ற அளவிற்கு தமிழில் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் தனுஷின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. தற்போது இப்படம் ஆஸ்கர் செல்கிறது.
திரையுலகிலேயே மிகவும் உயரிய விருது ஆஸ்கர். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் இருக்கும் கலைஞர்கள் அனைவரின் கனவும் ஆஸ்கர் விருது வாங்கவேண்டும் என்பது தான். இதுவரை, இந்தியாவிலிருந்து ஏ.ஆர். ரகுமான், ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் இவ்விருதை வாங்கியிருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பலர் இந்திய திரையுலகின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்டு வருகின்றனர். அவ்வகையில் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘குபேரா’ படமும் 2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்கிறது.
இந்த செய்தியை தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாய் வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மிக அர்ப்பணிப்போடு தனுஷ் ‘குபேரா’ படத்தில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு முன்னணி ஹீரோவும் இதுபோன்ற ஒரு ரோலில் நடிப்பார்களா? என்பது சந்தேகம் தான்.
தெலுங்கு பட சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியே ‘தனுஷ் நடித்த ரோலில் வேறொரு ஹீரோ நடிப்பது கடினம், அவருக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்’ என பாராட்டியிருந்தார்.