ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியலை பேசும் புதிய திரைப்படம்!

Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘Production No: 2’. இப்படத்தை, 2017-ம் ஆண்டு வெளியான ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ் இயக்குகிறார்.

ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

பொதுவுடைமை கொள்கைகளின் தாக்கம், சமூக பாகுபாடுகள், கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் திறமை இருந்தும் கிடைக்காத அங்கீகாரம் என மலைவாழ் மக்களின் குரலை உணர்வுபூர்வமாக பிரதிபலிக்கிறது இந்தத் திரைப்படம்.

2010 காலகட்டத்தை மையமாகக் கொண்ட கதைக்களம் என்றாலும், இன்றைய காலகட்டத்திலும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கையில் கல்வி, விளையாட்டு மற்றும் இடஒதுக்கீடு அரசியலின் தாக்கம் குறித்து பேசும் படைப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழக அரசியல் சூழலுக்கும் இப்படத்தின் கருத்துகள் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

திறமை இருந்தும் அதிகார வர்க்கத்தின் தடைகளை கடந்து சாதிக்கும் மக்களின் பயணத்தையும், அதன்பிறகும் அவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் மையமாக வைத்து இப்படத்தின் கதை நகர்கிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை” என்று கூறப்படும் சமூகத்தில், ஏதோ ஒரு வடிவில் மறைந்திருக்கும் ஒடுக்குமுறையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இப்படைப்பு உருவாகிறது.

இப்படத்தில் தமிழ்வாணன் கதாநாயகனாகவும், அபிராமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் CSK சரவணன், பிக் பாஸ் பிரவீன், ஜெய்பீம் மொசக்குட்டி, அகத்தியன், விஜயலட்சுமி, அருணாச்சலம், லயன் சுரேஷ், மைக்கேல், ஸ்ரீ ராம், கௌசல்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், உண்மையான மலைவாழ் கிரிக்கெட் வீரர்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – தாஜ்
ஒளிப்பதிவு – தேவசூர்யா (Red Flower)
இசை – ஜோன்ஸ் ரூபெட்
பாடல்கள் – பெருமாள் & நவீன்
வசனம் – பெருமாள்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பு – பிரியா
நடனம் – விஜய், ஆனந்த் குமார்
கலை இயக்கம் – சத்ய நாராயணன்
சண்டைப்பயிற்சி – லோகு

மலைவாழ் மக்களின் வாழ்வியலையும், சமூக நீதிக்கான அவர்களின் போராட்டத்தையும் பேசும் படைப்பாக ‘Production No: 2’ உருவாகி வருகிறது.

A New Film Showcasing the Lives of Yelagiri Hill Tribes!