ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியலை பேசும் புதிய திரைப்படம்!
Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘Production No: 2’. இப்படத்தை, 2017-ம் ஆண்டு வெளியான ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ் இயக்குகிறார். ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பொதுவுடைமை கொள்கைகளின் தாக்கம், சமூக பாகுபாடுகள், கல்வி மற்றும் […]