துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை ‘DQ41’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வந்த இப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி சீருடையில் மொட்டை மாடி சுவற்றின் ஓரத்தில் அமர்ந்து உரையாடும் துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் தோற்றம், இளமையும் காதலும் கலந்த ஒரு அழகான கேம்பஸ் காதல் கதையை உணர்த்துகிறது.

போஸ்டரில், பூஜா ஹெக்டே மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்க, வெட்கம் கலந்த புன்னகையுடன் துல்கர் சல்மான் காணப்படுவது, படத்தின் காதல் அம்சம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

#DQ41Dulquer SalmaanPooja HegdeSri SriTitle unveiled for Dulquer Salmaan and Pooja Hegde's new film