அல்லு அர்ஜுன்-திரிவிக்ரம் கூட்டணியில் ‘அவதார்’ படத்தின் வேற லெவல்..
இதுவரை கேள்விப்படாத புராணக்கதையை எடுக்கவுள்ளோம் என்றார் நாகவம்சி. இது பற்றிய தகவல்கள்..
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 2’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் இணைகிறார். இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாக வம்சி தற்போது தயாரித்துள்ள ‘மேட் ஸ்கொயர்’ படத்தின் புரமோஷனின்போது, அல்லு அர்ஜுன்- திரிவிக்ரம் படம் குறித்து அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில்,
‘அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் சாருடன் எங்களின் படம் முழு இந்தியாவையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு புராணப் படம். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட படங்களை போல இல்லாமல், இதுவரை கேள்விப்படாத புராணக் கதையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
மக்கள், அந்தக் கடவுளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள், ஆனால், அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியாது. அதை மிகப்பெரிய அளவில் இப்படத்தில் காட்டுவோம்’ என்றார். இது குறித்து இணையவாசிகள், ‘ஒருவேளை அவதார் படத்தின் வேறலெவலாய் இருக்குமோ? என பதிவிட்டு வருகிறார்கள்.
