Pushpa 2

ஐஸ்வர்யா ராய் மகள் குறித்து அவதூறு செய்தி: கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்..

நடமாடுற 50 கிலோ எடைகொண்ட தாஜ்மஹால் தான் ஐஸ்வர்யா.

இந்த ஸ்லிம்மான பேரழகியின் செல்ல மகள் ஆராத்யா பற்றிய தவறான தகவல்களை நீக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது.

நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன் உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் – தந்தையின் உதவியோடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுவரை நடிகர், நடிகைகள் இதுபோல் வழக்கு தொடர்வது தொடர்கதையாகி இருந்தாலும், நட்சத்திர ஜோடிகளின் மகள், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்ததால், ஆராத்யாவின் இந்த செயலை பலர் மனதார பாராட்டினர்.

இந்த மனு தொடர்பாக, தவறான செய்தியை பரப்பிய கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, ஆராதியாவின் உடல் மற்றும் மனநலம் குறித்து தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், சர்ச்சைக்குரிய யூடியூப் சேனல்களை முடக்கவும் கூகுளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சேனல்களை இயக்குபவர்கள் குறித்த விவரங்களை வழங்குவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் ஒரு குழந்தையின் உடல் அல்லது மன ஆரோக்கியம் பற்றிய வதந்திகளை பரப்புவது சட்டவிரோதமானது என்றும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

aishwarya rai daughter aaradhya filed case court notice to google