வீடியோ பதிவை அழிப்பதற்கு பேரம் பேசிய நயன்தாரா: வைரலாகும் புது சர்ச்சை..
நயன்தாரா தாமதமாக வந்த ஒரு நிகழ்ச்சியி்ல், இதோ பரபரக்கும் சில நிகழ்வுகள்..
அதாவது, மதுரையில் நடந்த ‘பெமி9’ விழாவினை புரமோட் செய்யும் விதமாக, சமூக வலைதள பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு இருந்த விழாவிற்கு நடிகை நயன்தாரா, பிற்பகல் 12 மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால், மாலை 6 மணிக்கு வந்தார்.
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நயன்தாராவிடம் யூடியூப்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது அங்கிருந்த ஒருவர், ‘அவங்க நார்மல் பீப்புள் கிடையாது’ என பேசியது மிகவும் டிரெண்டாகி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில், விழாவில் நடந்தவற்றை விமர்சித்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலமான அடிபொலி ஃபுட்டி என்பவர் பதிவிட்டிருந்தார். பின்னர், நயன்தாரா தரப்பில் இருந்து அழைத்து.. அவரிடம் அந்த வீடியோவை டெலிட் செய்யவும், பணம் தருவதாகவும் கூறி பேரம் பேசியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அந்த யூடியூபர் அதை டெலிட் செய்ய மறுத்து, பின்னர் இன்ஸ்டாகிராமில் முறையிட்டு அந்த நபர் பதிவிட்ட வீடியோவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து அதை டெலிட் செய்ய வைத்திருக்கிறார்கள்.
விமர்சனம் வைத்ததற்கு, தன்னிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, நயன்தாரா செய்துள்ள இந்த செயலை வெளிச்சம் போட்டு காட்டிய அந்த யூடியூபரின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
