ஒரு காலத்தில் உன் காதலியாக இருந்தேன்: ஆண்ட்ரியா ஃபீலிங்ஸ், நெட்டிசன்ஸ் ஆறுதல்

ஆண்ட்ரியா நினைவலைகளில் இன்னமும் அனிருத்தா? என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்..

பாடகியும் நடிகையும் ஆன ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார்.

இருவரும் ஒன்றாக பல பார்ட்டிகளுக்கு செல்வது, தனிமையில் சந்தித்துக் கொள்வது என தங்களது காதலை வளர்த்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து போனார்கள்.

அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் 5 வயது வயது வித்தியாசம். அதாவது அனிருத்தை விட ஆண்ட்ரியாவுக்கு சுமார் 5 ஆண்டுகள் அதிகம். முன்னதாக, இது பற்றி அனிருத் பேசியுள்ளார். மேலும், பிரிவுக்கு காரணம் வயது வித்தியாசம் தான் எனவும் கூறினார்.

இந்நிலையில், காதலர் தினமான இன்று, ஆண்ட்ரியா தனது வலைத்தளப் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, அதற்கு கேப்ஷன் இட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் ஆண்ட்ரியாவின் காதல் குறித்து தெரிந்தவர்கள் ஆண்ட்ரியா அனிருத்தைத்தான் மறைமுகமாக விமர்சித்துள்ளார் எனவும் கூறி வருகிறார்கள்.

ஆண்ட்ரியா அந்த பதிவில், ‘ஒரு காலத்தில் நான் உன் காதலியாக இருந்தேன். ஆனால், நான் இப்போது சுதந்திரமாக உள்ளேன். மேலும், நானும் எனது ஆன்மாவும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது இதயம் எப்போதும் எனக்கானது’ என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் ஆறுதல் தெரிவித்து, ‘வயது வித்தியாசம் காதல் வயப்படும்போது இருவருக்குமே தெரியாமல் போனது அறியாமை தானோ’ எனவும் கேள்விக்கணை தொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.