விஜய் தேவரகொண்டாவின் ‘ரிஷி’ யார் தெரியுமா?: வைரலாகும் நிக்நேம்
மனசுக்கு பிடிச்சவங்களை நிக்நேம் வைத்து அழைப்பதுண்டு. அது லூசு, எருமை, செல்லம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வு பற்றிப் பார்ப்போம்..
திரைப்பயணத்தின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த விஜய் தேவரகொண்டா சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு தரமான வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில், விஜய் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.
டீசருக்கு யங் NTR குரல் கொடுத்துள்ளார். ரோமானியச் சிலை போல தயாராகிவிட்டார் ரௌடி ஹீரோ. டீசர் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. டீசர், ஹாலிவுட் படங்களை நினைவூட்டுகிறது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா பற்றிய கிசுகிசு நீண்ட காலமாகவே நிகழ்ந்து வருகிறது. அதற்கேற்ப, பலமுறை மறைமுகமாக இந்த ஜோடி சிக்கியுள்ளது. இவ்வளவு நடந்தும், கிசுகிசு பற்றி இருவரும் மறுக்கவில்லை.
ராஷ்மிகா எங்கு சென்றாலும், விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் ‘வதினா’ என்று அழைக்கின்றனர். இந்நிலையில், ராஷ்மிகாவை விஜய் தேவரகொண்டா செல்லமாக என்னவென்று அழைக்கிறார் என்பதுதான் இப்போது ஹைலைட்டாக உள்ளது. கிங்டம் டீசர் வெளியீட்டின்போது, ஊடகங்கள் வழியாக விஜய் தேவரகொண்டாவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ராஷ்மிகா.
அதற்கு அவரது ஸ்வீட் ஹீரோ பதிலளிக்கும்போது, அவரை ‘ரிஷி’ என்று அழைத்தார். இதனால், விஜய், ராஷ்மிகாவை செல்லமாக ‘ரிஷி’ என அழைக்கிறார் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். தற்போது இந்தப் பெயர் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
‘புஷ்பா 2’ பட வெற்றிக்கு பிறகு ‘சாவா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது வெளியாகி உள்ளது. பார்க்கலாம், ரிஷி எப்டி நடிச்சிருக்காங்கன்னு.!