காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை: நடிகர் நகுல் பேச்சு..

Web Ads

‘காதல் கதை சொல்லவா’ திரைப்பம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

ஜெய​ராம், விஜய் சேதுப​தி, நகுல், ஆத்மிகா, ரித்​திகா சென் நடிப்​பில் சனில் இயக்​கி​யுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்​ல​வா’. ஷரத் இசையமைத்​துள்​ளார். ஷாஜன் களத்​தில் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை பெப்​பர் மின்ட் நிறு​வனம் சார்​பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ளார்.

தமிழ், மலை​யாளத்​தில் உரு​வாகி​யுள்ள இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. இதன் டிரெய்​லர் மற்றும் பாடல்​கள் வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. விழாவில், இயக்குநர்கள் கே.எஸ்​. அதி​ய​மான், மனோஜ் குமார், ராஜ்கபூர் இசையமைப்​பாளர் ரமேஷ் விநாயகம் சிறப்பு விருந்தினர்​களாகக் கலந்து கொண்​டனர்.

இயக்​குநர் சனில் பேசும்​போது, ‘தமிழில் படம் இயக்க வேண்​டும் என்​பது கனவாக இருந்தது. அது நிறைவேறி​யிருக்​கிறது. மலையாளிகளின் கனவு தேச​மாகத் தமிழ்​நாடு இருக்​கிறது. திரையுல​கில் வெற்றி தோல்வி முக்​கியமல்ல. ஒரு திரைப்​படம் எடுக்கும்போது மனது நிறைய வேண்​டும். இங்கே இத்​தனை பேரை சேர்த்து வைத்திருப்​பது சினி​மா​தான். இயக்​குநர் அதியமான் எனக்கு காட்ஃ​பாதர் மாதிரி. இங்கே மொழி முக்கியமில்​லை. திறமைதான் முக்கி​யம்’ என கூறினார்.

நடிகர் நகுல் பேசும்போது, ‘இப்​படத்தின் தலைப்பே எனக்​குப் பிடித்​திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்​லை. அது​தான் வாழ்க்​கை​யின் அடிப்படை. இந்​தப் படத்தில் வித்​தி​யாச​மான கதை உள்​ளது. இதில் புதுமையான பாத்​திரத்​தில் நடித்திருக்கிறேன்​’ என கூறினார்.

actor nakul about kadhal sollava movie release update
actor nakul about kadhal sollava movie release update