விரைவில் விஷாலுக்கு திருமணம்.. அவரே கொடுத்த அப்டேட்..!

Web Ads

விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

vishal getting married soon.. update given by him..!
vishal getting married soon.. update given by him..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் இவர் மயங்கி விழுந்து இருந்தது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதிலிருந்து குணமாகி தற்போது நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து பேசி உள்ளார்.

அதாவது விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பணி முடியப்போவதாகவும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லி இருக்கிறார். இது மட்டுமில்லாமல் ஆகஸ்ட் 29ஆம் தேதி அவரது பிறந்த நாளன்று திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் மேலும் நடிகர் சங்கம் கட்டிடம் திறந்த அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் நடக்க இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

இதனால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.