தக் லைப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன்.. முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் கமல் ஹாசன்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன்.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் கமல்ஹாசன் அதாவது தக் லைஃப் படத்தின் கதை நான் எழுதினேன் அதில் இருந்து ஒரு விஷயத்தை மட்டும் மாற்றி கிளைமேக்ஸ் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார் மணிரத்னம். ஏற்கனவே கமல்ஹாசன் முன்னதாக தலைவன் இருக்கிறான் என்ற படத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சி இருந்தால் அந்த கதை அமர் ஹைன் என்று அவர் டைட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கதையை நாயகன் இறந்து விட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார் என்பதை போல படம் இருக்கும் இதனால் இந்த படத்தை சற்று மாற்றி தான் தக் லைப் திரைப்படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
