கவர்ச்சி அனல்: ‘ராபின்ஹூட்’ படத்தில் ஸ்ரீலீலாவை மிஞ்சிய கெட்டிகா..

Web Ads

‘என் வழி ஸ்ரீலீலா வழி’ என முடிவெடுத்துள்ளார் கெட்டிக்கார நடிகை கெட்டிகா. இது பற்றி எரியும் நியூஸ் பார்ப்போம்..

‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீலீலா தெறிக்கவிட்ட ஆட்டம் ரசிகர்களை தரமாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பறந்து ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.

அவ்வகையில் அல்லது ஸ்ரீலீலா வழியில் தற்போது வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ‘ராபின்ஹூட்’ என்ற படத்தில் ஸ்ரீலீலா நடிக்க, கெட்டிகா சர்மா கலக்கியிருக்கிறார் இப்படத்தில், ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, வெண்ணெய்லா கிஷோர், மைம் கோபி  நடித்திருக்கும் இப்படம் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Web Ad 2

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் செம ஹிட் அடித்திருக்கிறது. ஒன் மோர் டைம், வாட்டெவர் யூ கோ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி யூட்யூபில் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் ‘அதி தா சர்ப்ரைஸு’ பாடல் வெளியானது. அந்த பாடலில் கெட்டிகா சர்மா நடனம் அனலாய் தெறிக்கிறது. அவரது உடையும் ஸ்டெப்பும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

மல்லிகை பூவில் ஜாக்கெட், குட்டை பாவாடை என மிகவும் கவர்ச்சியாக கெட்டிகா சர்மா தாராளம் காட்டியுள்ளார். மேலும், பாடலின் ஓபனிங்கிலேயே சுருட்டு புகைப்பது போலவும் நடித்துள்ளார். ஆக, ‘என் வழி லீலா வழி’ என ஆட்டத்தால் சொல்கிறார் என தெரிகிறது.

actress sreeleela and ketika sharma in robinhood movie update