துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கிறாரா தமன்னா?

Web Ads

நடிகை தமன்னா சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் அவர், துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருப்பதாகவும், சில நேரங்களில் காலை உணவைத் தவிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமன்னாவின் இந்த ஆன்மிக ஈடுபாடு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அவரது திடீர் ஆன்மிகப் பயணத்துக்குப் பின்னால் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா? அல்லது அவர் தனது ரசிகர்களுக்கு ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளாரா? எனப் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Web Ad 2

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)