‘மர்மர்’ பட புரொமோஷன் குறித்து, இயக்குனர் ஹேம்நாத் சவால்..
ரசிகர்கள் ரொம்ப உஷார். இதில், போலியான விளம்பரங்கள் எல்லாம் எடுபடாது. படம் பிடித்திருந்தால் ரிபீட் ஆடியன்ஸாகவும் வருவர். அவ்வகையில், ‘மர்மர்’ படம் பற்றிய பரபரப்பு தகவல் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் மூவியாக உருவாகி வெளியான ‘மர்மர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. பின்னர், ரிலீசான 2-வது நாளில் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது.
தொடர்ந்து இந்தப் படம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், படத்திற்கு இன்ஸ்டா இன்ஃப்ளூவன்ஸர்ஸை வைத்து பொய்யாக புரொமோஷனை கொடுத்ததாக தகவல் பரவியது. இதற்கு இப்படத்தின் இயக்குனர்
ஹேம்நாத் சற்று ஆவேசமாக சவால் விடுத்துக் கூறியதாவது:
‘நாங்கள் தினமும் லைவாக ஆடியன்ஸை தியேட்டருக்கு சென்று சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். அவர்களின் விமர்சனத்தை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாேம்.
நாங்கள் ஃபேக் புரொமோஷன் செய்கிறோம் என்று சொன்னதுபோல, இன்னும் சிலரும் படத்திற்கு எதிராக ஃபேக் புரொமோஷன் செய்து வருகின்றனர்.
வேண்டும் என்றால், நீங்களே வெவ்வேறு விதமான வயது வித்தியாசத்தில் 150 பேரை அழைத்து வாருங்கள். படம் போட்டு காண்பிக்கிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்’ என கூறினார். இது தொடர்பாக இணையவாசிகள், இயக்குனருக்கு கைத்தட்டல்களை வழங்கி வருகின்றனர்.
