அமரன் : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் முதல் மக்கள் வரை இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதிக் காட்சிகள் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் இந்த படம் வெளியாகி 13 நாட்களில் 260 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
