யோகிபாபுவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு: தொகுப்பாளினி பாவனா விளக்கம்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவின்போது, யோகிபாபுவை தொகுப்பாளினி பாவனா கலாய்த்த சம்பவம் தொடர்பான வீடியோவைப் பார்த்த பலரும் ‘பாவனா இதேபோல் மற்றொரு நடிகரிடம் நடந்து கொள்ள முடியுமா? என கேட்டு வீடியோ பகிர்ந்தார்கள்; பாவனாவை திட்டி வந்தார்கள்.
இந்நிலையில், பாவனா இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து, அதைப் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை எல்லாம் நீங்கள் பார்த்துள்ளீர்களா?
குறிப்பாக ஐபிஎல் சமயங்களில் சி.எஸ்.கே போட்டியின்போது? நாங்கள் அதேபோல மிகவும் ஜாலியாக பேசதான் முயற்சித்தோம். மேலும், நான் கேள்விகளை என்ன அர்த்தத்தில் கேட்கிறேன் என்பதை யோகிபாபு நன்றாகவே புரிந்துகொண்டார். அதனால்தான் அவரும் அதற்கு ஏற்றவாறு பதில் அளித்தார்.
எங்கள் இருவருக்குள்ளும் பல ஆண்டு காலப் பழக்கம் உள்ளது. பல நிகழ்ச்சியில் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதில் இருந்தே எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. சில முட்டாள் மக்கள் நாங்கள் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்ததை தேவையில்லாமல், ஏதோ எங்களுக்கு இடையில் ஈகோ பிரச்னையை உருவாக்குவதுபோல நினைத்து சில உள்ளடி வேலைகள் பார்க்கிறார்கள்.
ஆனால், அதெல்லாம் இங்கு பலிக்காது. நாங்கள் இருவரும் நிகழ்ச்சி முடிந்துகூட ஜாலியாகத்தான் பேசிக் கொண்டோம். அதனால் நெகடிவிட்டியை பரப்புவதை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்டோரி உடன் யோகிபாபுவையும் டேக் செய்துள்ளார். இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
