விஷால் திருமண அப்டேட் இன்று மாலை வெளியாகுமா? சூப்பர் தகவல் இதோ..!
விஷால் திருமணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்தவுடன் திருமணம் தேதியை வெளியிடப் போவதாக சொல்லி இருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான “யோகிடா” என்ற திரைப்படத்தின் விழா இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்ள போகும் நிலையில் நடிகர் விஷால் தன்ஷிகாவின் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
