தனி விமானத்தில், தளபதி விஜய்-திரிஷா கோவா பயணம்: வைரலாகிறது நியூ போட்டோஸ்..
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய்-திரிஷா சென்று வந்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. இது பற்றிக் காண்போம்..
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நேற்று 12-ம் தேதி கோவாவில், தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த சென்ற விஜய், தன்னுடைய பாதுகாவலர்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.
இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. ‘பெஞ்சல் புயல் பாதிப்பின்போது மக்களை நேரில் சந்திக்க வராத தளபதி, புயலால் பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து நிவாரண பொருட்களை வழங்கியவர், இப்போது கோவா வரை சென்றுள்ளார்’ என விமர்சித்தனர்.
இந்த சம்பவம் குறித்த பரபரப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, தற்போது தளபதி விஜய் இந்த திருமணத்தில் தனியாக கலந்து கொள்ளவில்லை, நடிகை திரிஷாவுடன் சேர்ந்து தான் கலந்து கொண்டுள்ளார் என்கிற புது தகவல் கிடைத்துள்ளது.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொள்ள, திரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றுள்ளார் தளபதி விஜய். இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி காரில் ஏறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அவர்கள் இருவரும் உதவியாளர்கள் நான்கு பேர் என மொத்தம் 6 பேர், தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதற்கு ஆதாரம் இதுதான் என்று சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.
அதாவது டிக்கெட்டில் விஜய், திரிஷா உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும், இருவரும் செக்யூரிட்டி சோதனையிலும் இருப்பது போன்ற போட்டோக்களும் வெளியாகி இருக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன.