விஜயகாந்த் மகன் நடிக்கும் ‘படை தலைவன்’ டிரெய்லர்; இன்று அனிருத் வெளியிடுகிறார்..
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இது குறித்த தகவல் காண்போம்..
விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.
‘மலேசியாவில் இருந்து சொந்த ஊர் மதுரைக்கு திரும்பும் கதாநாயகன், தன் தந்தையை கொன்றவர்களை பழி தீர்த்து, ஜல்லிக்கட்டு பந்தயத்தை மீட்டெடுக்கும் கதாபாத்திரத்தில் சண்முகப் பாண்டியன் நடித்திருந்தார்.
பின்னர், 2019-ல் ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படம் கைவிடப்பட்டது.
2016-ல் விஜய்காந்துடன் ‘தமிழன் என்று சொல்’ படம் உருவாகும் என சொல்லப்பட்ட நிலையில், விஜய்காந்தின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், தேர்தல் நெருங்கியதாலும் படம் நின்றுபோனது.
இச்சூழலில், ‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முகப் பாண்டியன் படை தலைவன் படத்தில் நடித்துள்ளார்.
‘வால்டர்’, ‘ரேக்ளா’ படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரைக்கடர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில், பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் முதல் பாடலான ‘உன் முகத்தை பார்க்கலையே..’ பாடலின் லிரிக் வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடவுள்ளார் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
‘சண்முகப் பாண்டியன், புலிக்கு பிறந்தது பூனையல்ல என நிரூபிப்பார்’ என பார்ப்போம்.!