நடிகர் பிரகாஷ் ராஜ் இல்லத்தில் சோகம்: அவரது தாயார் சுவர்ணலதா காலமானார்!

Web Ads

சென்னை: பிரபல பன்மொழி நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இந்தத் துயரச் செய்தி திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவு குறித்து அறிந்த திரையுலகைச் சேர்ந்த பலரும், பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Web Ad 2

இன்று மாலை இறுதிச்சடங்கு: மறைந்த சுவர்ணலதா அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.