மணிரத்னத்திற்கு இந்தி தெரியாதா?: கமல்ஹாசன் பெருமிதம்..
மணிரத்னமும் இந்தி மொழியும் குறித்து வைரலாகும் தகவல் காண்போம்..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில், சிம்பு, திரிஷா அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மணிரத்னம், கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மணிரத்னத்திடம், ‘கமல்ஹாசனை சந்தித்தபோது அவர் எப்படி ரியாக்ட் செய்தார்?’ என இந்தியில் கேட்டார். அதற்கு கமலோ, அவர் இந்தி.. என இழுக்க, அந்த ராஜஸ்தான் நபர் தன் கேள்வியை ஆங்கிலத்தில் கேட்டார்.
இதையடுத்து, மணிரத்னம் கூறியதாவது, ‘நான் வழக்கமாக இந்தியில் எதையாவது கேட்டால், சப்டைட்டிலை பார்ப்பேன் என சொல்ல அரங்கில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். தமிழ் ரசிகர்களோ ‘இவர் தான் உண்மையான இந்தி தெரியாது போடா’ என்கிறார்கள்.
படம் குறித்து சில காலமாக நானும், கமல்ஹாசனும் பேசி வந்தோம். இந்த பட கதையை உருவாக்கி, இருவருக்கும் பிடிக்கவே படமாக்கினோம் என ஆங்கிலத்தில் பதில் அளித்தார் மணிரத்னம்.
முன்னதாக மணிரத்னம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் கூறியதாவது, ‘மணிரத்னம் புனே இன்ஸ்டிடியூட்டில் தான் படித்தார். ஆனாலும், இந்தியில் பேச மாட்டார். எனக்கு தெரிந்து முதல் இந்தி தெரியாது போடா என்றால் அது மணிரத்னம் தான்’ என்றார்.
இந்நிலையில், மும்பையில் மணிரத்னம் கொடுத்த தக்லைஃப் பதிலை பார்த்தவர்களோ, மணி சார் பற்றி கமல்ஹாசன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. மும்பைக்கு போய்விட்டு இந்தி தெரியாது போடானு சொல்ல தனி தைரியம் வேண்டும் அது மணிரத்னத்திற்கு இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்கள். மேலும் சிலரோ, புனேவில் படித்த மணிரத்னத்திற்கு இந்தி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏன் இப்படி பண்றீங்க மணி சார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
