
2 ஆண்டுகளுக்கு பிறகு, 2 மாத இடைவெளியில் 2 படங்கள் வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் குஷி
விரைவில் இன்னொரு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டுக்கு வருகிறது. இது பற்றிய இனிப்பான தகவல் புசிப்போம்..
முன்னதாக, அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், விஜய் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என கூறினார்கள்.
விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகின்றார். அப்படி இருக்கையில் விஜய் ஏன் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என சிலர் பேசி வருகின்றனர். அஜித்திற்கு விஜய் வாழ்த்து சொல்லாதது பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவிக்கையில், ‘இருவரும் நல்ல நண்பர்கள். விஜய் தான் அஜித்திற்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியவர். அஜித் கார் பந்தயத்தில் வென்றதற்கும், அவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்ததற்கும் விஜய் முதல் ஆளாக போன் போட்டு வாழ்த்து கூறினார்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் ‘துணிவு’ படத்திற்கு பிறகு 2 வருடம் கழித்து ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகவுள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் ‘குட் பேட் அக்லி’ படமும் வெளியாகவுள்ளது. இப்படி 2 மாத இடைவேளையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 படங்கள் வெளியாவதில் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.