‘விடாமுயற்சி’ டிரெய்லர் படமாக்கப்பட்ட விதம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்..
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட டிரெய்லர் எப்படி உருவானது என பிடிஎஸ் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்..
லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களை தயாரித்த லைகா நிறுவனம், ‘விடாமுயற்சி’ படத்தையும் தயாரித்திருக்கிறது.
‘தல’ அஜித்-திரிஷா நடிப்பில் படத்தின் டிரெய்லர் காட்சியின் மேக்கிங் காட்சிகளை தற்போது வீடியோவாக வெளியிட வைரலாய் தெறிக்கிறது. பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாகிறது.
அன்றைய தினமும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி, ‘அஜித் குமார் சொன்ன கதையைத்தான் இயக்கியுள்ளேன். இந்த படத்தில் அவருக்கு பஞ்ச் டயலாக், மாஸ் சீனெல்லாம் இருக்காது. ஆனால், படம் ஹாலிவுட் படம் போல தரமான மேக்கிங்குடன் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடுவர் என்பது உறுதி’ என தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், சினிமாவில் ஒவ்வொரு காட்சியை உருவாக்குவதற்கு பின்னால் ஒரு பெருங்கூட்டத்தின் மெகா உழைப்பு உள்ளது. அவ்வகையில், அஜர்பைஜானில் 121 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது என்கிற BTS காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில்..
‘இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தை பார்த்து தொடர்ந்து அஜித் அவருக்கு ஆதரவாகவும் பாராட்டுக்களையும் ஊக்கத்தையும் கொடுக்கிறார். நெகட்டிவிட்டியை எப்படி கையாள்வது என்பதையும் சொல்லிக் கொண்டே வருகிறார்.
அஜித் பரபரப்பாய் வரும் நிலையில், டிரெய்லர் முடிவில்.. மகிழ் திருமேனி தோளில் அஜித் கைவைத்து தட்டிக் கொடுக்கும் காட்சி செம எனர்ஜி.! வேறலெவல்.! என ‘தல’ ரசிகர்கள் படத்தை சிலாகித்து வருகின்றனர். ஆறாந்தேதி தெறிக்க விடலாம்..