
சுந்தர்.சி நடிப்பில் கிரைம் த்ரில்லர் மூவி ‘வல்லான்’ திரைப்படம் வெளியாகிறது..
‘மத கஜ ராஜா’ படத்தை இயக்கிய சுந்தர்.சி, ‘வல்லான்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் குறித்துப் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில், சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பிறகு வந்த ‘மத கஜ ராஜா’ படம் சாதனை படைத்துள்ளது.
அதாவது, இன்றைய டிஜிட்டல் ஆடியன்ஸை திருப்தி அடைய வைத்து, வெறும் வெற்றி என நில்லாமல் ரூபாய் 50 கோடியை நோக்கி வசூலை வாரிக் குவித்து வருகிறது.
இந்நிலையில், மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர்.சி கதை நாயகனாக நடித்துள்ள கிரைம் த்ரில்லர் படமான ‘வல்லான்’ வெளிவருகிறது.
தற்போது, இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் தான்யா ஹோப், ஹெபா பட்டேல், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், டிஎஸ்கே உள்பட பலர் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘வல்லான்’ திரைப்படம், எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவிக்கிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை மணிபெருமாள் மேற்கொண்டிருக்கிறார்.
தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கும் ‘வல்லான்’ திரைப்படம் வருகிற ஜனவரி 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
