நாகசைதன்யா-சமந்தா நடித்த ‘அந்த படம்’ ரொம்ப பிடிக்கும்: சோபிதா ஓபன் டாக்
சைதன்யா நடித்த படங்களில், தனக்கு பிடித்த படம் குறித்து சோபிதா தெரிவித்ததை பார்ப்போம்..
சமந்தா உடனான 7 ஆண்டு காதல், திருமணம், 3 ஆண்டுக்குப் பிறகு விவாகரத்து என தன் வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இல்லற வாழ்க்கை குறித்து நாக சைதன்யா தெரிவிக்கையில், ‘ எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் சோபிதாவிடம் ஆலோசனை கேட்கிறேன்’ என்றார்.
இந்நிலையில், நாக சைதன்யா-சாய் பல்லவி நடிப்பில் தண்டேல்’ படம் வெளியாகி உள்ளது. இச்சூழலில், நாகா நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்ற கேள்விக்கு சோபிதா கூறியதாவது;
அவர் நடித்த காதல் கதைகள் அருமையாக இருக்கும். ஆனால், மாஸ் இமேஜுக்காக முயற்சி செய்த சில படங்கள் தோல்வியடைந்தன. அதில் ஒரு படம் பெஜவாடா. எனக்கு பிடிக்கல. “இந்தப் படத்தில் எப்படி நடிச்சீங்கன்னு கேட்டிருக்கேன்”.
அவர் காதல் ஹீரோவா நடித்த படங்கள் ரொம்ப பிடிக்கும். குறிப்பா சொல்லனும்னா சமந்தாவுடன் நடித்த ‘ஏ மாய சேசாவே’ படம் ரொம்பப் பிடிக்கும்’ என்றார்.
தற்போது, தண்டேல் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக நாக சைதன்யாவிற்கு சோபிதா துலிபாலா வாழ்த்து தெரிவித்திருந்தார். ஏனெனில், திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.