வருகிற காதலர் தினத்தில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்: முழு விவரம்
வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம். இந்நாளில் 9 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துக் காண்போம்..
1) சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வருகிறது. இமான் இசையமைத்துள்ளார்.
2) ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘பேபி & பேபி’ படம் வருகிறது. பிரதாப் இயக்கியுள்ளார்.
3)விமல் நடிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ‘படவா’ படமும் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் சூரியும் நடித்துள்ளார். நந்தா இயக்கியுள்ளார்.
4) ஸ்ரீகாந்த் மற்றும் சிந்தியா நடித்துள்ள ‘தினசரி’ திரைப்படமும் வருகிற14-ந் தேதி ரிலீஸாக உள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஜி.சங்கர் இயக்கியுள்ளார்.
5)ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கியுள்ள ‘ஃபயர்’ படமும் ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் ‘பிக் பாஸ்’ பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ரச்சிதா ஜோடியாகி உள்ளார்
6) புதுமுகங்கள் நடித்துள்ள ‘கண்ணீரா’ திரைப்படம் காதலர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது. கதிரவன் இயக்கியுள்ளார்.
7) ‘ஜெய் பீம்’ பட நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ‘காதல் என்பது பொதுவுடைமை’ படமும் ரிலீஸாக உள்ளது. ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
8) நகைச்சுவை மன்னர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படமும் வருகிற 14-ந்தேதி திரைக்கு வருகிறது. சாய் ராஜகோபால் இயக்கி உள்ளார்.
9) ‘வெட்டு’ என்கிற திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படமும் காதலர் தினமான 14-ந்தேதி திரையரங்கில் வெளியாகிறது.
பார்க்கலாம். இதில் எத்தனை படங்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் என.! இந்நிலையில், அதுவரை தான் ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலெக்ஷன் எனவும் கூறப்படுகிறது.