Web Ads

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் இளமைத் தோற்றம் பற்றி ஆரவ் பகிர்வு

‘பயிற்சியும் முயற்சியும் முறையாக தொடர்ந்தால், இலக்கை அடையலாம்’ என்பதுபோல ‘தல’ அஜித்தின் எடை குறைப்பு பற்றி ஆரவ் கூறியதாவது:

அஜித் தன்னுடைய ரசிகர்களை அதிகமாக சந்திக்காத நிலையிலும், அவர்கள் அஜித்தை அதிகமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இதேபோல, ரசிகர்கள் மீதான அஜித்தின் புரிதலும் ஆச்சர்யப்பட வைக்கிறது என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

‘விடாமுயற்சி’ படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டையும் தொடர்ந்து வருகிறது.

இந்த படத்தின் பிரமோஷனுக்காக, இயக்குனர் மகிழ் திருமேனி, ஆரவ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்ததை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் ஆரவ் தெரிவிக்கையில், ‘தன் உடல் எடையை குறைப்பதற்காக, அஜித் சிறப்பான வகையில் டயட்டில் இருந்துள்ளார். அவர் அதிகமாக சாப்பிட மாட்டார்.

வழக்கமாக அதிகமான ருசியான உணவுகளை எடுத்துக்கொண்டு வந்த அஜித்குமார், தன் எடையை குறைப்பதற்காக சைவத்திற்கு மாறியுள்ளார். கடுமையான பயிற்சிகளையும் முறையாக மேற்கொண்டார்’ என்றார்.

‘விடாமுயற்சி’ படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ளது குட் பேட் அட்லி. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. முன்னாக, படத்தின் டீசர் வரும் ப 14-ம் தேதி காதலர் தினத்தில் ரிலீஸாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.