Web Ads

தனுஷின் திரைப்பயணம் குறித்து, அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேச்சு

தனுஷ் குறித்து அவரது தந்தை மிகவும் பெருமிதம் அடைந்துள்ளார். இது பற்றிக் காண்போம்..

பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனிடையே ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார்.

மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படு பிஸியான வொர்க்கில் இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் இந்த மாதம் ரிலீஸாகிறது.

இச்சூழலில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, ‘தனுஷ் எப்போதுமே ஒரு கடவுளின் குழந்தைதான். எனது மனைவி ஊரான சங்கராபுரத்திலிருந்து எனது திரை பயணத்தை ஆரம்பித்தேன். நான் சினிமாவுக்காக கஷ்டப்படவே இல்லை. கடவுள்தான் என்னை கொண்டு போய் விசு சாரிடம் நிறுத்தினார். அதன் காரணமாக கஷ்டத்தை எதுவும் நான் அனுபவிக்கவில்லை.

நான் இயக்குநரானதற்கு பிறகும்கூட ஒரு 50 வயது மனிதர் வாய்ப்பு கேட்டார். இப்போதும் அந்த மனிதர் வாய்ப்புதான் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், என்னை கடவுள் அந்த மாதிரி விடவில்லை. அதேபோல்தான் தனுஷும். தனுஷாக எதையும் தேர்ந்தெடுப்பது இல்லை. எல்லாம் அவரை தேடி தானாகவே வருகிறது.

ஹிந்தி பட வாய்ப்பு, ஹாலிவுட் பட வாய்ப்பும் அப்படித்தான் வந்தது. நான் இதை மமதையில் சொல்லவில்லை.

தனுஷ் எப்போதும் ஒரு கடவுளின் குழந்தைதான். ஆனால், அவரிடம் கேட்டால் அப்பா, அம்மா கொடுத்த ஆசீர்வாதம் என்று சொல்வார். உண்மையில் நேரம் தவறாமையும் கடின உழைப்பும்தான் தனுஷின் வெற்றிக்கு காரணம்’ என்றார்.

ஆம், நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம் தானே.!