‘சேயோன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்!

Web Ads

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் புதிய உத்வேகத்துடன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். கதையின் அடுத்தகட்டத்திற்குள் படம் நகரும் நிலையில், முக்கியமான காட்சிகள் இந்தப் படப்பிடிப்பில் இடம்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

Web Ad 2

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.