ஜெட்டில் பறந்து வந்து சிவகார்த்திகேயன் ‘அமரன்’ பட புரமோசன் வொர்க்: வைரலாகிறது..
தேசப்பற்றின் பெருமையை உரக்கச் சொல்லும் வரலாற்றுப்படம் தான் ‘அமரன்’ என்றால் பொருந்தும். ஏனெனில் படம் பார்த்த இராணுவ வீரர்களும் குறிப்பாக, சென்ஸார் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆம்.., இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இது குறித்து தற்போது சிவகார்த்தியின் புரமோசன் பணி அப்டேட் பார்ப்போம்..
வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கினார். பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார்.
ராணுவ மேஜரின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுத்ததால், இந்திய ராணுவத் தளவாடங்களுக்குச் சென்றே படப்பிடிப்பு நடத்தியது.
படப்பிடிப்பின் போதே ராணுவ வீரர்களின் பாராட்டினை படக்குழு பெற்றது. அதேபோல், ராணுவ வீரர்களுக்கு என படக்குழு படம் ரிலீஸ்க்கு முன்னர் சிறப்பு திரையிடல் செய்தது. இதனைப் பார்த்த ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் படக்குழுவினரை பாராட்டினர்.
அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்ஹீஸ்-உம் கலந்து கொண்டார்.
அதேபோல், படக்குழுவினர் நடத்திய முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது உலக நாயகன் கமல்ஹாசன், “ஒவ்வொரு வீட்டிலும் இவர்களைப் போன்ற தைரியமான பெண்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தைரியம் அனைவருக்கும் இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
படம் ரிலீஸ்க்கு முன்னர் நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என இருவரும், நாட்டுக்காக தங்களது உயிரையும் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று, வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
படத்தின் புரோமோசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் கோவையில் நடைபெற்ற புரோமோசனில் கலந்து கொள்ள பிரைவேட் ஜெட்டில் வந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள், “விஜய் டிவி விஜே டு பிரைவேட் ஜெட் ஹீரோ” நம்ம சிவா கலக்குறாரே! என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
ஜெய்ஹிந்த்..!