ரோகினி வீசிய வலை, சிக்குவாரா முத்து?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..
ரோகினி வீசிய வலையில் முத்து சிக்க போகிறாரா என்பதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருணாச்சலம் இந்த மாதிரி பிசினஸ் பார்ட்டிலே என்ன நடக்கும்னு எனக்கும் தெரியும் அதனால எப்படி வந்தீங்களோ அதே மாதிரி திரும்பி வரணும் என்று மனோஜிடம் சொல்லுகிறார். முத்து மீனாவும் கிளம்ப ரோகினி அவங்க போகக்கூடாது இப்ப விட்டா எப்பவுமே எடுக்க முடியாது என்று அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய அதற்குள் அண்ணாமலை நீங்க என்ன கிளம்பிட்டீங்க இருந்து முடிச்சுட்டு வாங்க என்று முத்துவுடன் சொல்ல சரியான முத்து உள்ளே வந்து விடுகிறார். பிறகு அந்த பிசினஸ் மேன் மனோஜிடம் வற்புறுத்தி குடிக்க சொல்லுகிறார். எப்பயாவது இது மாதிரி மீட்டிங்ல தான குடிக்க போறீங்க, வேற எங்க குடிக்க போறீங்க என்று சொல்லி வற்புறுத்துகிறார். சரி என்று சம்மதித்து மனோஜ் குடிக்க ஆரம்பிக்கிறார். ரவி என்னடா இது குடிச்சிட்டு இருக்க என்று சொல்ல உடனே அவரிடம் ஒரு கிளாஸ் கொடுக்கிறார் எனக்கு வேண்டாம் ஸ்ருதி திட்டுவா அப்பா திட்டுவாரு என்று சொல்ல அப்பா நம்ம போறதுக்குள்ள தூங்கிடுவாறு இது நான் கொடுக்கிற பார்ட்டி நீயே பிடிக்கலைன்னா எப்படி என்று வற்புறுத்தி அவரை குடிக்க வைக்கிறார்.

மீனா தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க ஸ்ருதி அவரிடம் வந்து பேசுகிறார் என்ன பண்றீங்க சாப்பிடலையா என்று கேட்க இங்கே பரிமாற மாட்டாங்க எல்லாரும் தட்ட வச்சு நின்னுகிட்டு இருக்காங்க என்று சொல்ல இது மாதிரி தான் பண்ணுவாங்க. என்று சொல்லுகிறார் மீனா இதுக்கு எவ்வளவு செலவாயிருக்கும் சுருதி என்று கேட்க 5 லட்சம் இருக்கும் என்று சொல்லுகிறார். அந்த காசு இருந்தால் நான் மாடில ரூமில் கட்டி இருப்பேன் என்று சொல்ல சுருதி சிரிக்கிறார். பிறகு பார்ட்டி நடக்கும் ஹால் வெளியே உட்கார்ந்து கொண்டு செல்வத்திடம் பேசுகிறார் முத்து. கதவைத் திறந்த உள்ளே பார்த்தால் இருவரும் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அப்பா சொல்லிட்டு போனது மதிக்கலையா என்று கேட்க அவர் டெய்லி உன்னத குடிக்க வேணாம்னு சொல்றாரு நீ மட்டும் என்ன குடிக்காமையா இருக்க என்று கேட்க,நான் இப்ப குடிக்காம தான் இருக்கேன் என்று சொல்லுகிறார். அவர்கள் இருவரும் வற்புறுத்தியும் முத்து குடிக்காமல் சோபாவில் உட்கார்ந்து விடுகிறார். அங்கு இருக்கும் ஒருவர் குடித்துவிட்டு முத்துவிடம் பேச அவர் டென்ஷன் ஆகிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் முத்துவால் கட்டுப்படுத்த முடியாமல் மீனாவுக்கு போன் பண்ணுகிறார். அவரிடம் கெஞ்சி கேட்டும் பாட்டு பாடியும் சம்மதம் வாங்க முத்து முயற்சி செய்கிறார். ஆனால் குடிக்க கூடாது என்பதில் மீனா உறுதியாக சொல்லிவிடுகிறார். இதனால் முத்து போனை வைத்து விட மீண்டும் அவர் வந்து மொக்க ஜோக்கை சொல்ல முத்து கடுப்பாகிறார்.
சரி நம்ம சாப்பிட போகலாம் என்று ஸ்ருதி மீனாவை கூப்பிட நான் அவரையும் கூட்டிட்டு வரேன் என்று சொல்லுகிறார். அவங்க எல்லாம் இப்போதைக்கு வெளியே வர மாட்டாங்க நம்ம போய் சாப்பிடலாம் என்று வெளியே வர ரோகினி உடனே வித்யாவிடம் இவங்க போனா முத்துக்கு கூப்பிடுவாங்க அவங்களுக்கு இங்கே சாப்பாடு வரும்னு உட்காரவை என்று சொன்னவுடன் வித்யாவும் அதே செய்கிறார்.
முத்து குடிக்கிறாரா? ரோகினி என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
