எழிலுக்காக உதவி செய்த கோபி, குழப்பத்தில் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

எழிலுக்காக கோபி உதவி ஒன்றை செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஹாலில் உட்கார்ந்து கொண்டு பாக்யாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் உடனே செல்வி அம்மாகிட்ட ஏதாவது சொல்லனுமா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் எப்படி கண்டுபிடிச்சீங்க என்று கேட்க அதுதான் திருத்திரு என்று முழிச்சுக்கிட்டு கிச்சனை பார்த்துகிட்டு இருக்கீங்களே என்று சொல்லுகிறார். அம்மா நல்ல மூடுல இருக்காங்களா என்று கேட்க ஓரளவுக்கு நல்ல மூடு தான் என்று சொல்லுகிறார் செல்வி. பிறகு பாக்கியா காபியை கொண்டு வந்து கொடுக்க இனியா ,உன் புடவை சூப்பரா இருக்கு உன் ஹேர்ஸ்டைல் நல்லா இருக்கு ஃபேஸ் பிரைட்டா இருக்கு என்றெல்லாம் ஐஸ் வைக்கிறார். இதை பார்த்த பாக்யா பல வருஷமா நான் இப்படியேதான் இருக்கேன் இப்ப என்ன புதுசா கேட்டுக்கிட்டு இருக்க உனக்கு என்ன வேணும் என்று கேட்கிறார். இல்லம்மா என்று இனியா சொல்ல, 19 வருஷமா உன்ன பாத்துட்டு இருக்கேன் அதனால என்னன்னு சொல்லு என்று கேட்கிறார்.

டான்ஸ் காம்பெட்டிஷன்ல மாஸ்டர் வச்சி கத்துக்கணும்னு சொல்றாங்க என்று சொல்ல சரி கத்துக்கோ என்று சொல்லுகிறார். உடனே சந்தோஷப்பட்ட இனியா, அவங்களே அரேஞ்ச் பண்ணுவாங்களா என்று கேட்க இல்லம்மா நம்ப தான் பாத்துக்கணும் என்று சொன்னவுடன் இப்போதைக்கு அதெல்லாம் முடியாது நீ படிக்கிற வேலையை பாரு என்று சொல்லி விடுகிறார் இதனால் இனி ஆப்செட் ஆகிறார்.

Baakiyalakshmi Serial Today Episode Update
Baakiyalakshmi Serial Today Episode Update

காலேஜ்ஜில் இனியா போனை பார்த்து டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவருடைய மேம் வந்து நான் தான் நேத்தே சொன்னேன்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க மாஸ்டர் இல்லையா என்று கேட்க நான் வீட்டுல கேட்ட அம்மா சம்மதிக்கல என்று சொல்லி விடுகிறார் நீ நாளைக்கு காலேஜுக்கு அவங்கள கூட்டிட்டு வா நான் பேசி சம்மதம் வாங்க வைக்கிறேன் என்று சொல்ல என்ன நடக்கப் போகிறதோ என்று குழப்பத்தில் இருக்கிறார் இனியா.

மறுபக்கம் கோபி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவரது நண்பர் செந்தில் ஒருவரை கூட்டி வருகிறார். அவர் பிசினஸ்மேன் என்றும் அவர் இங்கே பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போவதாகவும் அது குறித்த ஐடியா கேட்க வந்துள்ளதாகவும் சொல்லுகிறார். குறிப்பாக படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்ல ஆனா அதுக்கு நிறைய செலவாகும் என்று நான் சொன்னேன் என்று செந்தில் சொல்லுகிறார். உடனே கோபி செலவாகும் ஆனா படம் ஹிட் கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று அவருக்கு சப்போர்ட் செய்கிறார்.

உடனே அவரும் அதுக்காக தான் ஒரு பெரிய டைரக்டர் கிடைப்பார்களா என்று வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல கோபி பெரிய டைரக்டரை விட அப்கமிங் டைரக்டருக்கு வாய்ப்பு கொடுங்க அவங்களும் இப்ப நல்ல படம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க பெரிய டைரக்டர் கிட்ட போனீங்கன்னா நீங்க அவங்ககிட்ட அடங்கி போகிற மாதிரி இருக்கும் ஆனா அப் கம்மிங் டைரக்டருக்கு வாய்ப்பு கொடுத்தீங்கன்னா நீங்க அவங்கள அடக்கி வேலை வாங்கலாம் என்று சொல்லுகிறார். பிறகு என்னோட பையனும் டைரக்டர் தான் அவன் ஒரு படம் பண்ணி ஹிட் கொடுத்திருக்கான். உங்களுக்கு அவனோட கதை பிடிச்சிருந்தா மட்டும் வாய்ப்பு கொடுங்க என் பையன்னு கேக்கல என்று சொல்ல அவரும் கதை பிடிச்சிருந்தா மட்டும் தான் வாய்ப்பு தருவேன் என்று சொல்லிவிடுகிறார். பிறகு நான் சொன்னதாக சொல்ல வேண்டாம் என்று ப்ரொடியூசர் இடம் கோபி சொல்லி விடுகிறார் அவரும் சரி என சம்மதிக்கிறார்.

கோபி சந்தோஷமாக இருக்க ராதிகா வரார் ராதிகாவிடம் கோபி என்ன சொல்லுகிறார்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Baakiyalakshmi Serial Today Episode Update
Baakiyalakshmi Serial Today Episode Update