நந்தினிக்கு குங்குமம் வைத்த சூர்யா,கோர்த்து விட்ட அசோகன்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவின் ரூமில் நந்தினி சாமி படம் வைத்து விளக்கேற்றி பூஜை செய்கிறார். உள்ளே வந்த சூர்யா என் ரூமில் சரக்கு வாசனை தான் வரும் இது என்ன புதுசா இருக்கு என்று கேட்டுவிட்டு ஏன் ஷாலினி என்ன பண்ற என்று கேட்கிறார். எதுக்கு ஷாலினி இங்க வைக்கிற , என்று சொல்ல என்னோட காவல் தெய்வம் கருப்பசாமி என்று சொன்ன ஆமா எங்களோட சாமியோ அது தான். ஆனா அத ஏன் இங்க வைக்கிற என்று கேட்க நான் எங்க போனாலும் எனக்கு இருக்கிற ஒரே துணை கருப்பசாமி தான் என்று சொல்ல, அப்ப என்கிட்ட சொல்ல மாட்டியா, சொல்ல சொல்லு என்று சொல்ல, உங்ககிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் கேக்கணும் அவங்க கிட்ட தொடப்பத்த குடுத்துட்டு ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க நான் உங்க பொண்டாட்டி மாதிரி தான். பொண்டாட்டி கிடையாது ஆனா கொஞ்ச நாளுக்கு அப்புறம் நான் போயிடுவேன். இதனால பிரச்சனை வரும் என்று சொல்லுகிறார். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்ன நீங்கதான் சிறந்த பிரச்சனை என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவின் நண்பர் ஃபோன் பண்ணி விருந்திற்கு கூப்பிடுகிறார். அவரது மனைவியும் சேர்ந்து சூர்யா அண்ணியையும் கூப்பிட்டு விருந்துக்கு வாங்க என்று சொல்லுகிறார். நாளைக்கு விருந்துக்கு சூர்யா வருவான், நல்லா சிக்கன் மட்டனும் என்று சமைக்கணும் சொல்லுகிறார்.
நந்தினியிடம் நண்பர் விருந்துக்கு கூப்பிடுகிறார் என்று சொல்ல நந்தினி வர மறுக்கிறார். என்னைய கூப்பிடாதீங்க நான் வரல என்று கிளம்ப அருணாச்சலம் வருகிறார். அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்க விவேக் விருந்துக்கு கூப்பிட்டால் இவ வர மாட்டுகிறா என்று சொல்ல, விருந்துக்கு கூப்பிடும்போது போகாம இருந்தா நல்லா இருக்காது போயிட்டு வாங்க என்று அருணாச்சலம் சொல்லுகிறார். பிறகு நந்தினி சரி என சொல்ல சூர்யா சந்தோஷப்படுகிறார் தேங்க்யூ ஷாலினி என்று சொல்லுகிறார்.
விருந்தெல்லாம் தடபுடலா இருக்கணும் என்று நண்பர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். மாதவியின் கணவர் சூர்யாவின் நண்பருக்கு போன் போட, முதல்ல காலர் டியூன் மாத்து என்று சுந்தரவல்லி சொல்ல அம்மா சாங் தான் வச்சிருந்த ஆனா அசோகன் சார் தான் மாத்த சொன்னாரு என்று கோர்த்து விடுகிறார். அதெல்லாம் விடு ஆபீசுக்கு வா கணக்கு பாக்கணும் என்று சொல்லுகிறார். உடனே இன்னைக்கா என்று கேட்டுவிட்டு எனக்கு 110° ஃபீவர் இருக்கு ஆன்ட்டி ஹாஸ்பிடல் இருக்கேன் என்று ஆக்டிங் கொடுத்தவுடன் சரியென சுந்தரவல்லி ஃபோனை வைக்கிறார்.
சூர்யா விருந்துக்கு கிளம்ப சுந்தரவல்லி உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு, நந்தினியை அணைத்துக் கொண்டு தங்கம் செல்லம் என கொஞ்சி கொண்டு வெளியே கூட்டி வருகிறார். வெளியில் வெயில் அதிகமாக இருப்பதால் மேலே சுந்தரவல்லி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து வெயில் அதிகமா இருக்கு டார்லிங் நீ உள்ள உட்காரு ஏசி போடுற என்று உள்ளே உட்கார வைக்கிறார்.
சூர்யா காரில் உட்கார்ந்து கொண்டு ஏன் உம்முன்னு வர ஏதாவது பேசு சென்னைக்கு எது புதுசா இல்ல முன்னாடி வந்து இருக்கியா என்றெல்லாம் கேட்க நந்தினி எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு வருகிறார். சூர்யா பாட்டு பாடி கொண்டு ஜாலியா வர நான் பாட்டு பாடினது உனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்க உங்களையே புடிக்கல சார் என்று சொல்லுகிறார். நான் அழகா ஆன்சமா தான இருக்க ஏன் என்ன புடிக்கல என்று கேட்கிறார். பேசாம வண்டி ஓட்டுங்க என்று சொல்ல சூர்யா சரி நீ பாட்டு கேளு என்று சொல்லிவிடுகிறார்.
உடனே கொஞ்ச நேரத்தில் நந்தினி வண்டியை நிறுத்த சொல்லுகிறார். நந்தினி கீழே இறங்கி வர ஷாலினி ஷாலினி என்று சூர்யா பின்னாலே ஓடி வருகிறார். பிறகு பூக்கடைக்கு வந்து ஐந்து முழம் மல்லிப்பூ வாங்குகிறார். பிறகு சூர்யாவிடம் காசு கொடுத்துட்டு வாங்க என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார். அந்த பூக்கடையை உனக்கு வாங்கி கொடுக்கட்டா என்று கேட்க இது ஒன்னும் எனக்கு இல்ல நம்ம போற வீட்டுக்கு என்று சொல்லுகிறார். எனது நண்பரின் வீட்டுக்கு வர அவர்கள் வாசலில் இருந்து வரவேற்று உள்ளே உட்கார வைக்கின்றனர். பிறகு சூர்யாவை அவரது நண்பர் கூட்டிப் போக நந்தினி அவர் சமைக்க அவருக்கு உதவி செய்கிறார். திடீர்னு சூர்யா சார் உங்க காலத்துல தாலி கட்டும்போது எல்லாரும் மாதிரியும் எனக்கும் ஷாக்கிங் தான் இருந்தது ஆனா சூர்யாவுக்கு நீங்கதான் பொருத்தமானவங்கன்னு இப்ப வரைக்கும் தோணுது என்று சொல்லுகிறார். சூர்யா அண்ணா ரொம்ப நல்லா வரும், உங்களுக்குள்ள தெரியுமா நாங்கள் லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டு இருக்கோம் எங்க கல்யாணத்தை பண்ணி வச்சது அவர்தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் அமைத்த வரம் என்று சொல்லுவாங்க அது மாதிரி தான் நான் நீங்க சூர்யாவிற்கு வரமா கிடைச்சு இருக்கீங்க என்று சொல்ல நானே பேசிகிட்டு இருக்கேன் நீங்க எதுவும் பேச மாட்டேங்கறீங்க என்று சொல்ல ஒன்னும் இல்ல என்று சொல்லிவிடுகிறார். நந்தினி என்கிற பொன்னால தான் உன்னோட லைஃப் ஸ்டைல் மாறப்போகுது நான் பழைய சூர்யாவை பார்க்க போறேன் என்று நண்பர் சந்தோஷப்பட இல்ல பழைய சூர்யா செத்துப் போயிட்டான். இந்த சூர்யாவை தான் எனக்கு புடிச்சிருக்கு என்று சொல்லுகிறார். பிறகு நண்பரின் மனைவியும் நந்தினியிடம் சூர்யா அண்ணாவை பழைய மாதிரி பா போன்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு நீங்க சூர்யா அண்ணாக்கு பொருத்தமானவங்க தான் என்று சொல்ல இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவின் சூர்யா விருந்துக்கு சென்ற இடத்தில் சூர்யாவிடம் நந்தினிக்கு குடும்பம் வைத்து விட சொல்லுகின்றன. சூர்யாவும் வைக்க ஜன்னலில் இருந்து அசோகன் வீடியோ எடுத்து சுந்தரவல்லியிடம் காட்டுகிறார்.
அவங்க சொன்னதுனால தான் நெத்தில குங்குமம் வெச்சேன் என்று சூர்யா சொல்ல அப்போ யாரை கேட்டு என் கழுத்துல தாலி கட்டுனீங்க என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.