Web Ads

ரோகினி மீது முத்துவுக்கு வரும் சந்தேகம், ஸ்ருதியிடம் பேசிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ad 2

ரோகினி மீது முத்துவுக்கு மீண்டும் சந்தேகம் வர, ஸ்ருதியிடம் பேசி உள்ளார் ரோகினி.

SiragadikkaAasai Serial Today Episode Update 31-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 31-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருண் பைக்கில் ஏறி உட்கார அருண் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதற்கு நன்றி என சொல்லுகிறார் அதற்கு சீத்தா நான் எப்ப ஓகே சொன்னேன் ரொம்ப நேரம் பஸ் வரல அதனால உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்ல அப்போ இறக்கி விற்றவா என்று கேட்கிறார் இல்ல லைப் லாங் உங்க கூட ட்ராவல் பண்ணனும்னு நினைக்கிறேன் பாதியிலேயே விட்டுறாதீங்க என்று சொல்ல அருண் சிரித்துக்கொண்டே லைப் லாங் விடமாட்டேன் என சொல்லு வண்டியில் சந்தோஷமாக செல்கின்றனர் மறுபக்கம் மீனா சோகமாக வீட்டில் இருக்க முத்து வருகிறார். மீனாவுக்காக முத்து சாப்பாடு வாங்கி கொண்டு வந்து கொடுக்க வீட்டில் யாரும் இல்லாதது சோகமாக இருப்பதாகவும் அவசரப்பட்டு நம்ம அவர கூட்டிட்டு வந்திருக்கக் கூடாதுன்னு தோணுது என்று சொல்லுகிறார்.

உடனே முத்து மீனாவுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு யாரு கறிக்கடைக்கார மணியவா பார்லர் அம்மா நம்மகிட்ட எவ்வளவு பெரிய உண்மையை மறைச்சிருக்கு இது நம்ம சொல்லலைன்னா இதுக்கு அப்புறம் இன்னும் எவ்வளவு பொய் சொல்லி இருந்தாலும் நம்ம நம்பிட்டு தான் இருந்திருக்கணும் காயத்தை வெட்டினால் மறைக்கக்கூடாது மருந்து தான் போடணும் என்று சொல்லுகிறார்.இருந்தாலும் அத்தையோ இல்ல மாமாவும் வெளிய போயிருக்காரு யாருமே இல்லாதது ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்ல இன்னைக்கு ஒரு நாளாவது ஃப்ரீயா இரு என்று சொல்லுகிறார். எப்படியோ அப்பா பாட்டியை கூட்டிட்டு வந்துருவாரு ரவி,ஸ்ருதி இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவாங்க என்று சொல்லிவிட்டு எனக்கு இன்னும் அந்த பார்லர் அம்மா மேல ஏதோ ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு இன்னும் ஏதோ ஒரு தப்பை மறைச்சுக்கிட்டே இருக்க மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார்.

நம்ம வேணா அவங்க ரூம்ல போய் தேடிப் பார்த்தால் ஏதாவது க்ளு கிடைக்கும்னு தோணுது என்று சொல்ல அதற்கு மீனா அதெல்லாம் தப்பு ஒத்துக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். நம்ம என்ன திருடவா போறோம் ஏதாவது பொருள் கிடைக்குதான்னு பாக்க போறோம் அவ்வளவுதான் அன்று சொல்லி சரி வேணும்னா நம்ம பூவா தலையா போட்டு பார்க்கலாம் தலை விழுந்தா போகலாம் பூ விழுந்தா போக வேண்டாம் என்று சொல்லி மீனாவை போடச் சொல்ல தலை விழுகிறது பிறகு இருவரும் மனோஜ் ரோகினி ரூமுக்குள் வந்து ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று பார்க்கின்றனர். அதில் மீனா துணி இருக்கும் கபோடில் தேடிப் பார்க்க அதில் ஒரு பையில் சின்ன பையன் டிரஸ் கிடைக்கிறது உடனே மீனா அதை எடுத்து பார்த்து இது யாருக்காக இருக்கும் என்று யோசிக்கிறார்.

அதற்கு முத்து ஒருவேளை நீ நெனச்ச மாதிரி மனோஜோட பையன் கிருஷ்க்கு இருக்க கூடாது ஒருவேளை மனோஜ் கிருஷ்க்கு வாங்கி இருப்பானோ என்று கேட்ட மீனாவும் இது க்ரிஷ் சைஸ் டிரஸ்தான் என்று சொல்லுகிறார் உடனே காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு எல்லா எடுத்ததை எடுத்தபடி வைத்துவிட்டு ரூமை சாத்திவிட்டு வந்து கதவை திறக்க மனோஜ் வருகிறார் எங்கடா போயிட்டு வரேன் என்று கேட்க நாங்க எங்க போனா உனக்கு என்ன என்று கேட்கிறார்.பசித்தது சாப்பிட போனேன் இங்கு யார் எனக்கு சாப்பாடு செஞ்சு கொடுப்பாங்க என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறார். மீனா நடந்த விஷயங்களை ஸ்ருதி இடம் சொல்ல இன்ட்ரஸ்டிங் என பேசிவிட்டு சீக்கிரம் வருவதாக போனை வைக்கிறார்.

ரவி வந்தவுடன் நம்ம இப்பவே இங்க இருந்து போகலாம் வீட்ல நிறைய இன்ட்ரஸ்டிங்கான ஃபன் காத்துக்கிட்டு இருக்கு என்று நடக்கிற பிரச்சனையை பார்த்தால் உனக்கு ஃபன் மாதிரி இருக்கா என்று சொல்லுகிறார். ரோகினிகும் ஆன்ட்டிக்கும் ஒரு வார் நடக்க போது அது நான் நேர்ல பார்த்து என்ஜாய் பண்ணனும் என்று ஜாலியாக பேசி இங்கிருந்து போய் போகலாம் என கிளம்ப ரவி அங்க மனோஜ்கும் அண்ணிக்கும் லைஃபே என்னாக போகுதுன்னு தெரியல இதுல உனக்கு சந்தோஷமா உன்னைத் திருத்தவே முடியாதுஎன்று சொல்ல அதற்கு ஸ்ருதி முதல்ல உங்க வீட்டுல இருக்குற உங்களுக்கு திருத்து என்று சொல்லுகிறார். சரி எனக்கு பசிக்குது நான் டின்னர் ஆர்டர் பண்ணிட்டு காலையில கிளம்பிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். மறுநாள் காலையில் மீனா முத்துவிற்கு காபி கொடுக்க சவாரிக்கு போகலையா என்று கேட்கிறார் பாட்டி வறாங்கல அந்த நேரத்துல இல்லாம இருந்தா எப்படி என்று சொல்ல பாட்டி வந்த எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று மீனா சொல்லுகிறார் ஆமா பாட்டிக்கு யார்கிட்ட எப்படி பேசணும்னு எல்லாமே தெரியும் என்று முத்து சொல்லுகிறார்.

இவர்கள் இருவரும் மனோஜ் பற்றி பேசு அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் மீனா என்னதா இருந்தாலும் உங்க அண்ணன் ரோகினிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கணும் அவங்க பொய் சொன்னதாகவே இருந்தாலும் அவங்கள கூட்டிட்டு வந்து இருக்கணும் அவங்க வரதுக்கு முன்னாடி உங்க அண்ணன் எந்த வேலையும் நிரந்தரமா இல்லாம இருந்தாரு அதுக்கு அப்புறம் தான் இப்போ ஷோரூம் ஆரம்பிச்சு நல்லா பணம் சம்பாதிக்கிறார் அவருக்கு கண்ணில் அடிபட்ட போது அவங்க கண்ணையே கொடுக்கிறேன்னு ரோகினி சொன்னாங்க அப்படி இருக்கும்போது இவர் இப்படி பண்ணி இருக்கக் கூடாது என்று சொல்ல அதற்குமுத்து அவன் எப்பவுமே அம்மா பேச்சு கேட்டுகிட்டு இருப்பான் மீறமாட்டான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ஸ்ருதிக்கு ரோகினி போன் போட என்ன பேசுகின்றனர்? ரோகினி என்ன சொல்லுகிறார்? ஸ்ருதியின் பதில் என்ன ? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 31-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 31-03-25